மூடுக

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியரகம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்திய ஆட்சி பணி அதிகாரி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கபட்டு மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்துகிறார். அவரே மாவட்ட நிர்வாக நடுவராக இருந்து சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறார். அவர் மாவட்டத்தின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகள், சட்டம்,ஒழுங்கு நிர்வாகம், பொது தேர்தல், துப்பாக்கி உரிமம் போன்ற பல முக்கிய பணிகளையும் செயல்படுத்துகிறார்.

கூடுதல் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட வருவாய் அலுவலர் வருவாய் துறையின் நேரடி நிர்வாகத் தலைவராகயிருந்து மாவட்டத்தில் வருவாய்த்துறை சட்டங்களின் செயல்பாட்டினை உறுதிசெய்கிறார். அவர் மாவட்ட கூடுதல் நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். குடிமை பொருட்கள் வழங்கல், நில நிர்வாகம், கனிமம் மற்றும் கனிமப்பொருட்கள் சட்டங்கள், கிராம நிர்வாகம் போன்றவை அவரது முக்கிய பணிகளாகும். வருவாய் துறையின் அனைத்து பிரிவுகளையும் நிர்வகித்து, தினசரி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதும் இவரது பணியாகும். உதவி ஆட்சியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரிவுகளின் வேலைகளை நிர்வகித்து மாவட்ட ஆட்சியருக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.

இந்திய ஆட்சிப்பணி அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் மட்டத்தில், நியமிக்கப்படும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் , மற்றும் துணை ஆட்சியர் மட்டத்தில் நியமிக்கப்படும் அலுவர்கள் ஊரக உள்ளாட்சித்துறையின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகளை செயல் படுத்துவதில் ஆட்சியருக்கு உறுதுணையாக உள்ளனர். பேருராட்சிகளின் உதவி இயக்குனர், நகராட்சி, மாநகராட்சிகளின் கமிஷனர்கள் நகர்புற உள்ளாட்சிதுறை நிர்வாகத்தினை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு உறுதுணையாக உள்ளனர்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை:

மாவட்ட ஆட்சியரகம் – பிரிவுகள் – விழுப்புரம்
வ.எண் பிரிவு தலைமை வகிப்பவர் பொருள்
1 பிரிவு “அ” அலுவலக மேலாளர்(பொது), மா.ஆ.நே.உ(பொது) அனைத்து நிலை பணி அமைப்பு மாறுதல் மற்றும் நியமனம், அலுவலுக ந்டைமுறை.
2 பிரிவு “ஆ” மா.ஆ.கூ.உ(நிலம்), துணை வட்டாட்சியர் நிலம்-பட்டா மாற்றம்-நில மாற்றம்-நில குத்தகை, ஆக்கிரமைப்புக்கள்
3 பிரிவு “சி” அலுவலக மேலாளர்(குற்றவியல்), மா.ஆ.நே.உ(பொது) சட்டம் மற்றும் ஒழுங்கு, தடுப்புக்காவல்
4 பிரிவு “டி” மா.ஆ.நே.உ(கணக்கு), துணை வட்டாட்சியர் சம்பளம் மற்றும் பிற பட்டியல்கள்
5 பிரிவு “இ” தனித்துணை ஆட்சியர்(ச.பா.தி), துணை வட்டாட்சியர், கூடுதல் துணை வட்டாட்சியர். முதியோர் ஓய்வூதியம், மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடத்துதல்
6 பிரிவு “எப்” துணை வட்டாட்சியர் தபால் அனுப்புதல், வரப்பெறும் தபால் பிரித்து கொடுத்தல்
7 பிரிவு ” ஜி” மா.ஆ.கூ.உ(நிலம்),  துணை வட்டாட்சியர் எழுதுபொருட்கள், ஆவணங்கள், மாவட்ட அரசிதழ் வெளியிடுதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்று மெய்த்தன்மை, இருப்பிட சான்று மெய்த்தன்மை சரி பார்த்தல்
8 பிரிவு “எச்” தேர்தல் தனி வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் வருவாய் தீர்வாயம், தேர்தல், மக்கள்தொகை கணக்கெடுப்பு
9 பிரிவு “ஐ” துணை வட்டாட்சியர் முக்கிய பிரமுகர் வருகை, சுதந்திர தினம், குடியரசு தினம் ஏற்பாடுகள் செய்தல், துறை தேர்வுகள் நடத்துதல், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள்
10 பிரிவு “ஜெ” துணை ஆட்சியர்(மா.பி.வ.ந.அ), துணை வட்டாட்சியர், தனி துணை வட்டாட்சியர்(உதவி தொகை)  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்

 

11 பிரிவு”கே” மாவட்ட வழங்கல் அலுவலர் உணவுப்பொருள் வழங்கள் மற்றும் குடும்ப அட்டை
12 பிரிவு ” எல்” உதவி ஆணையர்(கலால்), துணை வட்டாட்சியர் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை
13 பிரிவு “எம்” ஆதி திராவிடர் நலத் துறை அலுவலர், மேலாளர், உதவி கணக்கு அலுவலர், தனி வட்டாட்சியர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்
14 பிரிவு “என்” துணை வட்டாட்சியர் கிராம நிர்வாகம், ஆவண காப்பகம்

 

ஊரக வளர்ச்சி

உ.வ.மு.அ(ஊரக வளர்ச்சி) :: ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்

உ . இ(பஞ்சாயத்துக்கள்) :: கிராம பஞ்சாயத்துகள்

உ . இ(தணிக்கை) :: தணிக்கை மற்றும் உயர்மட்ட குழு

நே.மு.உ(SS) :: சிறு சேமிப்பு

நே.மு.உ(NM) :: பள்ளி சத்துணவு திட்டம்

உ . இ(ட.ப)) :: பேரூராட்சிகள் நிர்வாகம்

மாவட்ட ஆட்சியர்கள் – விழுப்புரம் மாவட்டம்
வ.எண் பெயர் பணிக் காலம் ஆரம்பம் பணிக் காலம் முடிவு
22. டாக்டர். C.பழனி இ.ஆ.ப 05.02.2023 இந்நாள் வரை
21. திரு.D.மோகன் இ.ஆ.ப 16.06.2021 04.02.2023
20. திரு.ஆ.அண்ணாதுரை இ.ஆ.ப 18.11.2019 15.06.2021
19. முனைவர். L.சுப்பிரமணியன் இ.ஆ.ப 11.09.2016 17.11.2019
18. திருமதி. M.லட்சுமி இ.ஆ.ப 04.07.2015 11.09.2016
17. திரு.V.சம்பத் இ.ஆ.ப 25.01.2012 30.06.2015
16. திருமதி.C.T.மணிமேகலை இ.ஆ.ப 04.06.2011 24.01.2012
15. டாக்டர்.R.பழனிச்சாமி இ.ஆ.ப 11.06.2008 03.06.2011
14. திரு.பிரஜேந்திர நவனித் இ.ஆ.ப 13.12.2006 10.06.2008
13. திரு. ஆஷிஷ் சாட்டர்ஜி இ.ஆ.ப 25.05.2006 09.11.2006
12. திரு.K.பாலச்சந்திரன் இ.ஆ.ப 07.6.2004 12.05.2006
11. டாக்டர்.K.கோபால் இ.ஆ.ப 20.07.2003 31.05.2004
10. திரு.A.முகம்மது அஸ்லம் இ.ஆ.ப 10.06.2001 18.07.2003
9. திரு.T.K.ராமச்சந்திரன் இ.ஆ.ப 30.07.2000 09.06.2001
8. திரு. தங்கசாமி இ.ஆ.ப 24.04.2000 13.07.2000
7. திரு. விபுநைய்யார் இ.ஆ.ப 17.09.1999 24.04.2000
6. திரு. பரம்சித் சித்து இ.ஆ.ப 23.12.1998 17.09.1999
5. திரு. அதுல்ய மிஸ்ரா இ.ஆ.ப 07.12.1997 22.12.1998
4. திரு. பிரவீண் குமார் இ.ஆ.ப 18.09.1996 06.12.1997
3. திரு.K.ராமலிங்கம் இ.ஆ.ப 01.06.1996 09.09.1996
2. திரு. அசோக்குமார் குப்தா இ.ஆ.ப 18.11.1994 01.06.1996
1. திரு. அசோக்வர்தன் ஷெட்டி இ.ஆ.ப 30.09.1993 15.11.1994