மூடுக

மாவட்டம் பற்றி

தோற்றம்

இந்தியாவின் தெற்கு முனையில் அமைந்திருக்கும் தமிழ்நாட்டின் முப்பத்து இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும் விழுப்புரம். மாவட்ட தலைமையகம் விழுப்புரத்தில் அமைந்துள்ளது. 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டம் அமைக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் மாநிலத்தில் மிகப்பெரிய மாவட்டமாகும். திருச்சிராப்பள்ளி மற்றும்  சென்னைக்கு  நடுவே  தேசிய நெடுஞ்சாலை எண் 45-ல் அமைந்துள்ளது. இது இரயில் பாதையால் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. இது முக்கிய சந்திப்பாகும். தமிழ்நாட்டின் எந்த மூலையிலும், இந்தியாவின் பிற பகுதிகளுக்கும்  செல்லலாம். மாவட்டத்தில் கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் உள்ளன. விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பெரும்பாலான அரசு அலுவலகங்கள் பெருந்திட்ட  வளாகத்தில் உள்ளன.

அமைவிடம்

விழுப்புரம் மாவட்டம் 11 38’25’N மற்றும் 12 20’44 “S: 78 15′ 00” W மற்றும் 79 42 ’55 “E இடையே 3725.54 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் கிழக்கு மற்றும் தெற்கு திசையில் கடலூர் மாவட்டமும், மேற்கு திசையில் கள்ளக்குறிச்சி மாவட்டங்களும், வடக்கு திசையில் திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

நிர்வாக அலகுகள்

தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் 932 வருவாய் கிராமங்கள், 2 வருவாய் கோட்டங்கள், 9 தாலுகாக்கள், 13 வட்டாரங்கள், 8 பேரூராட்சிகள், 693 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் 2 நகராட்சிகள் ஆகியவை உள்ளன.

புவியியல் அமைப்பு

மாவட்டத்தின் பொது புவியியல் உருவாக்கம் எளியதாக தோற்றம் அளிக்கிறது. அதில் பெரும்பகுதி மெட்டாமார்பிக் பாறைகளால் மூடப்பட்டுள்ளது. வெவ்வேறு புவியியல் காலத்திற்குச் சொந்தமான வண்டல் பாறைகள் மூன்று பெரிய குழுக்களாக உள்ளன. பல மலைக்குன்றுகள் சூழ்ந்த இந்த மாவட்டத்தின் மிகவும் அழகிய பகுதி செஞ்சி மலையைப் சுற்றி உள்ளது.