மூடுக

மங்கள புத்த விகார்

வகை மற்றவைகள்

மங்கள புத்த விகார் விழுப்புரம் மாவட்டம் வானுார் தாலுகா, புளிச்சப்பள்ளத்தில் அமைந்துள்ளது. இது ஆரோவிலுக்கு மிக அருகில் உள்ளது. ஆன்மீகம், யோகா மற்றும் தியானம் ஆகியவற்றில் உங்களுக்கு விருப்பம் இருந்தால் இந்த மங்கள புத்த விகார் பார்வையிட சிறந்த இடங்களில் ஒன்றாகும். மங்கள புத்த விகார் ஒரு பௌத்த வளாகம் ஆகும். புத்தா் கோவில் தியான மண்டபம் மற்றும் நுாலகத்துடன் முழுமையடைந்துள்ளது. இந்த கோவிலில் பெரிய தியான மண்டபம் உள்ளது. மையத்தில் ஒரு அழகான புத்தா் சிலை உள்ளது. அங்கு நுாறு போ் அமா்ந்து தியானம் செய்ய முடியும். புனித புத்தரை அலங்கரிக்கும் பூக்களை நீங்கள் காண்பீா்கள். மேலும் நீங்கள் தியானிப்பதற்கு முன்பு ஒரு பூஜை மெழுகுவா்த்தியை ஏற்றி வைக்கலாம். இந்த கட்டிட கலை எளிமையானது. ஆனால், கண்கவர 30 அடி உயரம் உள்ள புத்தரை கொண்டுள்ளது. நீங்கள் தோட்டத்திற்கு செல்லும் போது ஒரு போதி மரத்தின் கீழ் அமா்ந்திருக்கும் புத்தரின் சிலையை நீங்கள் காணலாம் மேலும் புத்த விகார் முன் காட்சியாக சித்தரிக்கும் தாமரையில் அமா்ந்திருக்கும் புத்தரின் சிலையை நீங்கள் காணலாம். மங்கள புத்த விகார் தாய்லாந்தில் சிம்பேவில் தலைவரான மரியாதைக்குரிய பரமகுரு சமோதன் கேத்ரனாத் அவரால் 2018ல் திறக்கப்பட்டது. இது பௌத்த மதத்தை பற்றிய அறிவைப்பெறுவதற்கான சிறந்த இடம். எனவே, உலகேங்கிலும் உள்ள சில புகழ்பெற்ற பௌத்த அறிஞா்கள் மற்றும் துறவிகள் எழுதிய புத்தகங்களை நீங்கள் காண முடியும். ஒரு நுாலகமும் இதில் உள்ளது. ஒரு கொண்டாட்டம் அல்லது ஒரு திருவிழா இல்லாவிட்டால் கோவில் கூட்டமாக இருக்காது. இந்த சமயத்தில் அது கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு மேலும் மக்கள் தியானம், பூஜை செய்வதற்கு இங்கு வருகிறார்கள்.

ஆகவே மிகவும் தேவைப்படும் அமைதிக்காவும் இல்லையேனில் பரபரப்பான நல்வாழ்க்கையிலிருந்து ஆரோக்கியமான இடைவெளிக்காவும் இங்கு செல்லுங்கள். 2018ஆம் ஆண்டு முதல் பலர் எங்கள் இடத்திற்கு வருகை தருகிறார்கள். இப்பொழுது நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளி்ன் எண்ணிக்கை அதிகம் மற்றும் ஆன்மீக தேடலுக்காக எங்கள் இடத்திற்கு வருகை தருபவர்களின் எண்ணி்க்கை அதிகரிக்கிறது.

 

மங்கள புத்தவிகார் சென்றடைய

  • விழுப்புரத்திலிருந்து 45கி.மீ
  • திண்டிவனத்திலிருந்து 27கி.மீ
  • புதுவையிலிருந்து 12 கி.மீ
  • ஆரோவில்லிருந்து 7 கி.மீ

புகைப்பட தொகுப்பு

  • மங்கள புத்த விகார்-படம்1
  • மங்கள புத்த விகார்-படம்2
  • மங்கள புத்த விகார்