மூடுக

மேல்மலையனூர்

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம் மேல்மலையனூர் தாலுக்காவில் விழுப்புரத்தில் உள்ளது . இங்குள்ள அங்காள பரமேஸ்வரியை புற்று தேவி என்றே கூறுகிறார்கள்.

ஒரு முறை பிரம்மாவின் மனைவியான சரஸ்வதி, பார்வதி மற்றும் சிவபெருமானுக்கு சாபமிட, சாப விமோசனம் பெற பார்வதி விஷ்ணுவை வேண்டிக் கொள்ள அவரும் அவளை மேல்மலையனூரில் உள்ள நதிக் கரையில் சென்று ஒரு ஐந்து தலை நாகமாக புற்றில் இருந்தால் சிவ பெருமான் அங்கு வந்து அவளுக்கு சாப விமோசனம் தந்து மீண்டும் மணப்பார் என்றார்.

அவர் கூறியது போலவே அங்கு வந்த பார்வதி வெகு காலம் சிவனுக்காக காத்திருந்தாள். சிவனும் மேல்மலையனூரில் இருந்த நதியைத் தாண்டி வந்தபோது அகோர உருவில் பாம்பாக இருந்த பார்வதியும் மேலும் சிவபெருமானும் சாப விமோசனம் பெற்றனர் .

அதே நேரத்தில் தான் மேல்மலையனூரில் அதே அதி பயங்கர உருவுடன் இருந்தவாறு அங்கு வந்து அவளை வேண்டித் துதிக்கும் பக்தர்கள் சாப விமோசனம் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் தீமைகளை அழித்து, பக்தர்களுக்கு ஏவப்படும் பில்லி சூனிய தீமைகளை ஒழித்து, அவர்கள் நலனைக் காத்தருளிக் கொண்டு இருப்பேன் எனவும் கூறிவிட்டு மறைந்தார். அதனால் பார்வதி அதே இடத்தில் பூமியில் புற்றில் பாம்பாக உள்ளதாக ஒரு ஐதீகமும் நம்பிக்கையும் உள்ளது.

அமாவாசை நாட்களில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும். கருவறையில் உள்ள புற்றையே தேவியாக வழிபட்டு பூசிக்கின்றார்கள். வருடாந்திர உற்சவத்தின் போது கிராமத்தினர் புதிய தேரில் அவளை உட்கார வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள். பௌர்ணமி தினங்களில் அந்த ஆலயம் பக்தர்கள் வந்து வணங்க இருபத்தி நான்கு மணிநேரமும் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. பல கிராமத்திலும் இருந்து வரும் மக்கள் அங்கு வந்து பொங்கல் படைகின்றார்கள். பிப்ரவரி-மார்ச் மாதங்களில் அங்காள பரமேஸ்வரிக்கு நடைபெறும் வருடாந்திர திருவிழாவின்போது மயானக் கொள்ளை என்ற பெயரில் பெரிய விழா நடக்கும்போது பக்தர்கள் அங்கு பலதரப்பட்ட தானியங்களைக் கொண்டு வந்து உணவு சமைத்து அதை அங்காள பரமேஸ்வரிக்கு அற்பனிக்கின்றார்கள். அங்கு மயானத்தில் அவளை ஆராதிக்கின்றார்கள். பலர் சாமி ஆடிக்கொண்டே செல்வார்கள். அதைப் பார்க்கவே பயமாக இருக்கும். அங்காள பரமேஸ்வரிக்கு நாட்டின் பல இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன என்றாலும் அவளுக்கு மேல்மலையனூர் ஆலயமே முக்கியமான ஆலயம்.

புகைப்பட தொகுப்பு

  • மேல் மலையனூர் - பிராதான வாயில்
  • ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி
  • தேர் திருவிழா

அடைவது எப்படி:

வான் வழியாக

மிக அருகில் உள்ள வானூர்தி சென்னை. சென்னையில் இருந்து 160கி.மீ தொலைவில் உள்ளது விழுப்புரம். விழுப்புரத்தில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம்

தொடர்வண்டி வழியாக

மிக அருகில் உள்ள தொடா்வண்டி நிலையம் விழுப்புரம், இது சென்னையில் இருந்து 160கி.மீ தொலைவில் உள்ளது . இங்கிருந்து இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம்.

சாலை வழியாக

சென்னையில் இருந்து 160கி.மீ தொலைவில் உள்ளது .விழுப்புரம். விழுப்புரத்தில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம்.