ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | ஆரம்ப நாள் | முடிவு நாள் | கோப்பு |
---|---|---|---|---|
விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) –1 பணியிடம் மற்றும் விழுப்புரம் காவல் எல்லைக்குட்பட்ட Special Juvenile Police Unit –க்கு பணியாற்றிட ஏதுவாக சமூகப்பணியாளர் –2 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்ய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை – விழுப்புரம் மாவட்டம் – விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு – ஒரு பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) மற்றும் இரண்டு சமூகப்பணியாளர்கள் (SJPU) 1)பதவியின் பெயர் – பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) காலிப்பணியிடம் – 1 ஊதியம் – 27,804/- கல்வி தகுதி அனுபவம் மற்றும் வயது வரம்பு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி/சமூகவியல்/குழந்தை மேம்பாடு/ மனித உரிமைகள் பொது நிர்வாகம்/ உளவியல்/ மனநலம்/ சட்டம்/ பொது சுகாதாரம்/ சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் ( அல்லது) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி/சமூகவியல்/குழந்தை மேம்பாடு/ மனித உரிமைகள் பொது நிர்வாகம்/ உளவியல்/ மனநலம்/ சட்டம்/ பொது சுகாதாரம்/ சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் இளங்கலைப் பட்டம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு/சமூக நலன் சார்ந்த துறையில் திட்ட உருவாக்கம்/ செயல்படுத்தல், கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையில் 2 வருட அனுபவம் மற்றும் கணினியில் திறமை பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 42 வயதிற்குள் 2) பதவியின் பெயர் – சமூகப்பணியாளர் காலிப்பணியிடங்கள் – 2 ஊதியம் – 18,536/- கல்வி தகுதி அனுபவம் மற்றும் வயது வரம்பு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி/ சமூகவியல் /சமூக அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினியில் அனுபவம் இருத்தல் வேண்டும். வயது வரம்பு: 42 வயதிற்குள் இதற்கான விண்ணப்பபடிவத்தை விழுப்புரம் மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் (செய்தி வெளியீடு நாளிலிருந்து 15 நாட்களுக்குள்) கீழ்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம். முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகம், (பழைய உணவக கட்டிடம்), விழுப்புரம் மாவட்டம் – 605 602. தொலைபேசி எண் – 04146 -290659 |
29/01/2025 | 12/02/2025 | பார்க்க (130 KB) |