தாட்கோ
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), 1974-இல் ஆதிதிராவிடர்களுக்கு தீப்பிடிக்கா வீடுகள் கட்டுவதற்காக இந்திய நிறுவனச் சட்டம், 1956-இன் படி நிறுவப்பட்டது, அதனைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர்களின் சமூக, கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்காக கட்டிடங்கள் தொடர்பான பொறியியல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை 1980-81 ஆம் ஆண்டு முதல் இந்நிறுவனம் செயல்படுத்தி வருகின்றது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள்:
1. நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் (NMNT)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நிலமற்ற விவசாயி குடும்பத்தில் மகளிருக்கு நிலவுடைமை ஏற்படுத்துவது. இத்திட்டத்தில் நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகயில்லாத பிற இனத்தைச் சார்ந்தவராகயிருக்கவும். நிலத்தின் சந்தை மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 5.00 இலட்சம் வரை முன் விடுவிப்பு மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் முழு விலக்களிப்படும்.
2. முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் (CM-ARISE)
இத்திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்களுக்கு சமூக பொருளாதார அதிகாரமளித்து வளம் உண்டாக்க பல்வேறு தொழில்கள் மற்றும் புதுமையான தொழில்களுக்கு திட்ட தொகையில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ. 3.50 இலட்சம் வரை முன் விடுவிப்பு மானியமும், வங்கி கடனையும் மற்றும் சரிவர கடனை திருப்பி செலுத்துபவர்களுக்கு 6 சதவீதம் வட்டி பின் விடுவிப்பு மானியமும் வழங்கப்படுகிறது.
3. பிரதான் மந்திரி அனுசுசித் ஜாதி அபியுதாய் யோஜனா திட்டம் (PM-AJAY)
(I) தனிநபர் கடனுதவி திட்டம் (PM-AJAY – Individaul)
இத்திட்டத்தில் ஆதிதிராவிடர்களுக்கு மட்டும் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள திட்ட மதிப்பீடு ரூ,1.00 இலட்சம் கொண்ட பல்வேறு தொழில்களுக்கு 50% அல்லது அதிகபட்சம் ரூ.50000/- முன் விடுவிப்பு மானியமாக வழங்கப்படுகிறது.
(II) மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம் (PM-AJAY – Group)
இத்திட்டத்தில் குறைந்த பட்சம் 12 உறுப்பினர்களை கொண்டு ஒரு குழுவாக இருக்க வேண்டும். மகளிர் திட்ட அலுவலகத்தில் பதிவு செய்து தரம் பிரிக்கப்பட்டிருந்தால் தொழில் தொடங்க பொருளாதார கடனுதவி திட்டத் தொகையில் 50% அல்லது அதிகபட்சம் ரூ.600000/- முன் விடுவிப்பு மானியம் விடுவிக்கப்படும்.
4. திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் (Skill Development Trainings)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் படித்த மாணாக்கர்களுக்கு மாவட்டளவில் வழங்கிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை ஒருங்கிணைத்து மாநில அளவில் பல்வேறு வகையான திறன் பயிற்சிகளை பயில்வதற்கு விடுதி, உணவு மற்றும் பயிற்சி கட்டணங்களை தாட்கோ மூலம் வழங்கப்பட்டு வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சிகளை வழங்கி வருகிறது.
மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமான ரூ. 3.00 இலட்சத்திற்குள்ளாகவும், 18 முதல் 55 வயதுக்குட்பட்டும் இருக்க வேண்டும். மேலும், கூடுதல் விபரம் மற்றும் விண்ணப்பிக்க https://newscheme.tahdco.com/ என்ற தாட்கோ இணையதள முகவரியை அணுகவும்.