மூடுக

நெகிழி இல்லா இலக்கை நோக்கி விழுப்புரம் மாவட்டம்

நெகிழி ஏன் தீங்கு விளைவிக்கிறது?

நெகிழி எப்போதும் நிரந்தரமாக அழிக்க இயலாத ஒரு பொருள். அனைத்து நெகிழி (தண்ணீர் பாட்டில்கள், பைகள் மற்றும் உறிஞ்சு குழல் போன்றவை) பொருட்களில் 33 சதவீதம், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படுகின்றன. நெகிழி பொருட்களை மட்கச் செய்ய முடியாது; இது சிறிய மற்றும் அதனினும் சிறிய துண்டுகளாக உடைகிறது.

தூக்கி எறியப்பட்ட நெகிழி பொருட்கள் 2,000 ஆண்டுகளுக்கு மேலும் அழியாமல் அதே நிலையிலேயே இருக்கும்.

மனித ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

நெகிழியில் இருந்து வெளியேறும் நச்சு இரசாயனங்கள், கிட்டத்தட்ட நம் அனைவரின் இரத்தம் மற்றும் திசுக்களில் காணப்படுகின்றன. இவற்றின் வெளிப்பாடாக புற்றுநோய், பிறப்பு குறைபாடுகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, நாளமில்லா சுரப்பிகள் அழற்சி மற்றும் பிற நோய்களும் ஏற்படுகின்றன.

நிலத்தடி நீரைக் கெடுக்கிறது

நெகிழிகில் உள்ள சில சேர்மங்களும், அதன் துணைப்பொருட்களும் மண் மற்றும் நிலத்தடி நீரை காலப்போக்கில் தொடர்ச்சியான கரிம மாசுகளாக மாற்றுகின்றன.

விலங்குகளுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது.

விலங்குகள் நெகிழியை உணவாக உட்கொள்ள நேரிடுகிறது மற்றும் அதனை குட்டிகளுக்கு உணவாகவும் அளிக்கிறது. மேலும் இவை பூமியின் மிக தொலைதூர இடங்களிலும் சிதறிக் காணப்படுகிறது.

நமது கடல்களில் மட்டும் 36 க்கு 1 என்ற விகிதத்தில் நெகிழிக்கழிவுகள் காணப்படுகின்றன.முதுகெலும்பிகள், ஆமைகள், மீன்கள், கடற்பறவைகள் மற்றும் பாலூட்டிகள் உட்பட 260 க்கும் அதிகமான உயிரினங்கள் நெகிழி கழிவுப்பொருட்களில் சிக்கிக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.இவை பலவீனமான இயக்கம் மற்றும் உணவு, குறைவான இனப்பெருக்கம், வீக்கம், புண்கள் மற்றும் இறப்புகளுக்கு காரணமாக அமைகின்றன.

சுற்றுச்சூழலில் நெகிழி அடுக்குகள்

அமெரிக்கர்கள் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் டன் நெகிழியை நிராகரிக்கிறார்கள். 8 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது.மீதமுள்ளவை நிலங்கள், குப்பைத்தொட்டிகளில் நிறைந்திருக்கின்றன. கடலில் சுமார் 25000 டன் எடையுள்ள 5 ட்ரில்லியன் நெகிழி பொருட்கள் உள்ளன.

உணவுச் சங்கிலியை விஷமாக்குகிறது.

சமுத்திரங்களில் உள்ள மிகச் சிறிய உயிரினங்கள் கூட நுண்ணிய நெகிழியை சாப்பிடுகின்றன. அவற்றின் அபாயகரமான இரசாயனங்களை உறிஞ்சுகின்றன.சிறிய உடைந்து போன நெகிழி துண்டுகள், கடல் வாழ்வைத் தக்க வைத்துகொள்வதற்கு தேவையான பாசிகளை இடமாற்றம் செய்கின்றன.

மொத்தத்தில் சுற்றுலா, பொழுதுபோக்கு, வியாபாரம்,மனிதர்களின் ஆரோக்கியம்,விலங்குகள், மீன் மற்றும் பறவைகள் ஆகிய அனைத்தும் நெகிழிகளால் பாதிக்கப்படுகின்றன.

 

01/01/2019 முதல் நெகிழி பொருட்களை தடை செய்ய தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள்
எடுத்த நடவடிக்கைகள் தொடர்பை பார்க்க
தமிழக அரசு G.O No.82 Click Here [PDF 465KB]
தமிழக அரசு G.O No.84 Click Here [PDF 1.0MB]

 

விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள்
எடுத்த நடவடிக்கைகள் தொடர்பை பார்க்க
மாவட்ட ஆட்சியர் வழங்கிய அறிவுரைகள் Click Here [PDF 2.2MB]
மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு கூட்டம் – 23-08-2018 Click Here [PDF 65KB]
நெகிழி மாசற்ற தமிழ்நாடு விழிப்புணர்வு பிரச்சாரம் – 25-08-2018 Click Here [PDF 61KB]