மூடுக

ஆரோவில் என்பது ஒரு சர்வதேச நகரமாகும். இங்கு உலகம் முழுவதிலிருந்தும் வந்து 50,000 பேர் வசிக்கக்கூடிய நகரமாக இது திட்டமிடப்பட்டுள்ளது.

ஆரோவில்லின் நோக்கம் – மனிதஇன ஒற்றுமையை பரிசோதித்துப் பார்ப்பதற்காக இந்த இலட்சிய நகரம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 1930-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஸ்ரீ அன்னைக்கு இத்தகைய நகரத்தை உருவாக்கவேண்டுமென தோன்றியது. 1960-ஆம் ஆண்டு மத்தியில் பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமம் இதுபோன்ற நகரத்தை உருவாக்கவேண்டும் என ஸ்ரீ அன்னையிடம் தெரிவித்தது. அதற்கு ஸ்ரீ அன்னை தம் ஆசீர்வாத்தை அளித்தார். பின்னர் இக்கருத்துரு இந்திய அரசாங்கத்தின் முன்வைக்கப்பட்டது, அதற்கு அது தனது ஆதரவை அளித்தது. மேலும், யுனெஸ்கோவின் பொதுசபைக்கு எடுத்து சென்றது. 1966-ஆம் ஆண்டு யுனெஸ்கோ எதிர்கால மனித சமுதாயத்திற்கு இது முக்கியமான திட்டம் என பாராட்டி ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி, இதற்கு தனது முழு ஆதரவையும் அளித்தது.

வேற்றுமையில் மனிதஇன ஒற்றுமையை உருவாக்குவதே ஆரோவில்லின் நோக்கம் ஆகும். இன்றைக்கு ஆரோவில் மட்டுமே சர்வதேச அளவில் மனிதஇன ஒற்றுமை, ஜீவியத்தின் திருவுருமாற்றம் ஆகியவற்றின் பரிசோதனைக்குரிய முதல் மற்றும் ஒரே நகரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலையான வாழ்வு, எதிர்கால மனித குலத்திற்கு தேவையான பண்பாட்டு, சுற்றுச்சூழல், சமூக, ஆன்மீகத் தேவைகள் ஆகியவற்றில் அக்கறையுடன் நடைமுறையில் ஆராய்ச்சி செய்து வருகின்றது.

28.02.1968 அன்று வருங்கால நகரமான ஆரோவில்லின் தொடக்க விழாவில், நகரத்தின் மையப் பகுதியான ஆலமரத்தின் அருகே, இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் 121 நாடுகளின் பிரதிநிதிகள் சுமார் 5,000 பேர் கூடியிருந்தனர். இப்பிரதிநிதிகள் தங்கள் சொந்த மண்ணில் இருந்து கொண்டுவந்த மண்ணை, ஆம்பித்தியேட்டரில் வைக்கப்பட்ட, சலவைக் கல்லால் ஆன தாமரை மொட்டு வடிவத் தாழியினுள் இட்டனர். அதேநேரத்தில், 4 அம்சங்கள் கொண்ட ஆரோவில் சாசனத்தை ஸ்ரீ அன்னை அளித்தார்.

அவர்கள் சுமார் 52 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இங்கு வந்துள்ளனர் (குழந்தை முதல் 80 வயதுக்கு மேற்பட்டோர் வரை). அனைத்து சமூக, பண்பாட்டு பின்னணிகளைக் கொண்டுள்ள அவர்கள் ஒட்டுமொத்த மனிதஇனத்தை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள். இந்நகரத்தின் மக்கள்தொகை தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகின்றது. ஆனால், தற்போது சுமார் 2500 பேர் உள்ளனர். இதில் இந்தியர் சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் ஆவார்.

புகைப்பட தொகுப்பு

  • ஆரோவில்
  • மாத்ரிமந்திர்- நெருப்பு
  • மாத்ரிமந்திர் - முழு வடிவம்

அடைவது எப்படி:

வான் வழியாக

மிக அருகில் உள்ள வானூர்தி நிலயம் புதுச்சேரி. புதுச்சேரியில் இருந்து 10கி.மீ தொலைவில் உள்ளது ஆரோவில் நகரம்

தொடர்வண்டி வழியாக

மிக அருகில் உள்ள தொடா்வண்டி நிலையம் புதுச்சேரி. புதுச்சேரியில் இருந்து 10கி.மீ தொலைவில் உள்ளது ஆரோவில் நகரம்

சாலை வழியாக

சென்னைக்கு தெற்கே சுமார் 150 கி.மீ மற்றும் புதுச்சேரிக்கு வடக்கே 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.