அரசு துறை ஆணை எண். 150 நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, நாள். 31.05.1994-ல் ஊரக வளர்ச்சித் துறையில் இருந்து பேரூராட்சிகளை, தனித் துறையாக பிரித்து 1994-ம் ஆண்டில் திருத்தப்பட்ட புதிய நகராட்சிகள் சட்டம் 25-ன்கீழ் கொண்டுவரப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது. மாவட்ட பேரூராட்சி அலுவலர், (District Town Panchayat Officer-DTPO) மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர்(பேரூராட்சிகள்) என்ற பெயரில் இருந்த பதவியினை 06.02.1995 முதல் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் என்று வகைப்படுத்தி, மண்டல அலுவலகம் என்று இயங்கி வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 17 மண்டலங்களில் கடலூர் மண்டலமும் ஒன்று. இம் மண்டலம் கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு மாவட்ட ஆட்சித்தலைவர்களது நேரடி கட்டுப்பாட்டிலும், உதவி இயக்குநர் கண்காணிப்பிலும் இயங்கி வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 15 பேரூராட்சிகள் உள்ளன, பேரூராட்சிகள் நான்கு நிலைகளில் கீழ்க்கண்டவாறு தரம் பிரிக்கப்பட்டு இயங்கி வருகின்றன.
வ. எண் | பேரூராட்சிகளின் விவரம் | எண்ணிக்கை |
---|---|---|
1. | சிறப்பு நிலை பேரூராட்சிகள் | 1 |
2. | தேர்வுநிலை பேரூராட்சிகள் | 2 |
3. | முதல்நிலை பேரூராட்சிகள் | 3 |
4. | இரண்டாம்நிலை பேரூராட்சிகள் | 1 |
வ.எண் | நிலை | பேரூராட்சிகளின் பெயர் |
---|---|---|
1. | சிறப்புநிலை பேரூராட்சிகள் | செஞ்சி |
2. | தேர்வுநிலை பேரூராட்சிகள் | விக்கிரவாண்டி |
3. | தேர்வுநிலை பேரூராட்சிகள் | வளவனூர் |
4. | முதல்நிலை பேரூராட்சிகள் | மரக்காணம் |
5. | முதல்நிலை பேரூராட்சிகள் | திருவெண்ணெய்நல்லூர் |
6. | முதல்நிலை பேரூராட்சிகள் | அரகண்டநல்லூர் |
7. | இரண்டாம்நிலை பேரூராட்சி | அனந்தபுரம் |
வ.எண் | பேரூராட்சிகளின் பெயர் | தொடர்பு கொள்ளவேண்டிய அலுவலர் | அலுவலக தொலைபேசி எண் | மின் அஞ்சல் முகவரி |
---|---|---|---|---|
1. | வளவனூர் | செயல் அலுவலர் | 04146 – 231240 | eotpv7@gmail.com |
2. | விக்கிரவாண்டி | செயல் அலுவலர் | 04146 – 233730 | eotpv8@gmail.com |
3. | செஞ்சி | செயல் அலுவலர் | 04145 – 222431 | eotpv09@gmail.com |
4. | மரக்காணம் | செயல் அலுவலர் | 04147 – 239370 | eotpv11@gmail.com |
5. | திருவெண்ணெய்நல்லூர் | செயல் அலுவலர் | 04153 – 234336 | eotpv13@gmail.com |
6. | அரகண்டநல்லூர் | செயல் அலுவலர் | 04153 – 224646 | eotpv14@gmail.com |
7. | அனந்தபுரம் | செயல் அலுவலர் | 04145 – 232426 | eoapmv15@gmail.com |
திட்டங்கள்
தூய்மை இந்தியா திட்டம் – தனிநபர் கழிப்பிடம் கட்டுதல்
தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் இம்மாவட்டத்தில் செஞ்சி மற்றும் அனந்தபுரம் பேரூராட்சிகள் மட்டும் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத பேரூராட்சியாக இந்திய அரசால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 13 பேரூராட்சிகளும் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத பேரூராட்சிகளாக இந்திய அரசால் அறிவிப்பு செய்வதற்கு தயார் நிலையில் உள்ளது.
கடந்த 2015-16 மற்றும் 2016-17ம் ஆண்டுகளில் 3581 தனிநபர் கழிப்பிடங்கள் ரூ.286.48 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலும் 114 ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் ரூ.74.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.
நடப்பு ஆண்டு 2017-18ல் 681 தனிநபர் கழிப்பிடம் ரூ. 54.48 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இத்திட்டம் முழுமையாக பேரூராட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு பேரூராட்சிப் பகுதிகளில் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத பேரூராட்சிகளாக அரசு அளவில் அறிவிப்பு செய்திட துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டம்)
விழுப்புரம் மாவட்டத்தில் 15 பேரூராட்சிகளில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் 2015-16ம் ஆண்டிற்கு 504 வீடுகள் ரூ.1058.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு (1 வீட்டிற்கு ரூ.2.10 இலட்சம் மான்யம்) அனுமதிக்கப்பட்டு 160 வீடுகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 344 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
2016-17ம் ஆண்டில் 6013 வீடுகள் ரூ.12627.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டு வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
2017-18ம் ஆண்டில் மணலூர்பேட்டை பேரூராட்சியில் 103 வீடுகள் ரூ. 216.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டு வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்(SWM)
விழுப்புரம் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் அனைத்து பேரூராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள், பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் இதர பணியாளர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் நோக்கம் பேரூராட்சியின் அனைத்து பகுதிகளையும் சுத்தமாகவும், சுகாதார நிலையிலும் வைத்திருக்க வேண்டும் என்பதே ஆகும்.
இத்திட்டத்தின் மூலம் வீடுகள்தோறும் குப்பை தரம் பிரித்து வாங்கப்படுகிறது. தெருக்களில் உள்ள குப்பைகள் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரம் செய்து திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தும் இடத்தில் ஒன்றாக கொட்டப்பட்டு அதில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் என்று தனித் தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது.
மக்கும் குப்பைகளை உரம் தயாரிக்கவும், மக்காத குப்பைகளை தரம் வாரியாக பிரித்து அவற்றினை விற்பனை செய்யப்படுகிறது.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு பேரூராட்சிகளின் பகுதிகள் எங்கும் குப்பைகள் இல்லாத நிலை காணப்படுகிறது. அதுவும் தவிர பேரூராட்சிகளின் மக்களிடையே குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டாமல் தங்கள் வீட்டுக்குள்ளேயே வைத்து தனித் தனியாக பிரித்து கொடுக்கும் எண்ணமும் மக்களிடையே பரவி வருகிறது. அதுவும் தவிர இத்திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நிலையும், இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் உரத்தினை விற்பனை செய்வதால் பேரூராட்சிக்கு வருமானத்தை பெருக்கும் நிலையும் முன்னேற்றத்தில் உள்ளது.
மேலும், பேரூராட்சிகளில் இத்திட்டத்தின் மூலம் தயாரிக்கப்படும் இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் மொத்தமாகவும், சில்லைரையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி
பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்,
பழைய நாட்டாண்மைக் கழக கட்டடம்,
பீச்ரோடு,
கடலூர்- 607001.
தொலைபேசி எண் – 04142 – 294542
நிகரி – 04142 – 294542
மின் அஞ்சல் – adtp-tncud@nic[dot]in,
adcuddalore@gmail[dot]com
adtpcud@hotmail[dot]com