நோக்கங்கள்
தமிழ்நாட்டினை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாநிலமாக உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கம், கா்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு (3 வயதுக்கு மேல்), குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம், வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவா்களுக்கு ஊட்டச்சத்தினை உறுதிப்படுத்துதல், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான உடல், அறிவாற்றல் மொழி, மன எழுச்சி, சமூக, மற்றும் உணா்ச்சி வளா்ச்சியை வளா்ப்பது. 3 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அதிக கவனம் செலுத்துதல், குழந்தை பருவ பராமரிப்பு, வளா்ச்சி மற்றும் கற்றல், தாய் மற்றும் வயதுவந்தோர் பாதுகாப்பு உட்பட உகந்த ஊக்குவிப்பு வழங்குதல்.
வ.எண். | தலைமை துறை | தொலைபேசி | கைபேசி | மின்னஞ்கல் முகவரி |
---|---|---|---|---|
1. | மாவட்ட திட்ட அலுவலா் | 04146-224719 | d607vpm@gmail[dot]com |
நிறுவன விளக்கப்படம்
இணை உணவு திட்டம்
- துவங்கப்பட்ட ஆண்டு : 1975 – 1976 – தமிழ்நாட்டில்
- திட்டத்தின் நோக்கங்கள் : பிறந்தது முதல் 6 வயது வரையான குழந்தைகள் , கர்ப்பிணி தாய்மார்கள் , பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்களின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்துதல். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் இலக்கு ” ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாநிலமாக மாற்றுதல் “
- அலகு எண்ணிக்கை : ஒரு வட்டாரத்திற்கு 100 மையங்கள் வீதம் ஒரு லட்சம் மக்கள் தொகை உள்ளடக்கியது
மக்கள்தொகை | மையம் |
---|---|
400 முதல் 800 வரை மக்கள்தொகை | 1 முதன்மை அங்கன்வாடி மையம் |
800 க்கு மேல் மக்கள்தொகை | 1 முதன்மை அங்கன்வாடி மையம் |
150 முதல் 400 வரை மக்கள்தொகை | 1 குறு அங்கன்வாடி மையம் |
மலை பகுதி / பழகுடியினர் பகுதி / பாலைவன பகுதி மக்கள்தொகை 300 முதல் 800 வரை | 1 முதன்மை அங்கன்வாடி மையம் |
மலை பகுதி / பழகுடியினர் பகுதி / பாலைவன பகுதி மக்கள்தொகை 150 முதல் 300 வரை | 1 குறு அங்கன்வாடி மையம் |
முன்பருவ கல்வி
- திட்டத்தின் நோக்கம் : 2 வயது முதல் 5+ வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு (ECCE) முறை சாரா பள்ளி முன்பருவக்கல்வி அளித்தல் மற்றும் பள்ளி இடைநிற்றலை குறைதல்
- துவங்கப்பட்ட ஆண்டு : 1975 to 1976
- திட்டத்தின் எண்ணிக்கை : திட்டங்கள் (20 கிராம புறம் + 2 நகர்ப்புறம்)
- அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை : 2941(2800 முதன்மை மையங்கள் + 141 குறு மையங்கள் )
வ.எண் | வட்டார வளா்ச்சி அலுவலகம் | முதன்மை மையங்கள் | குறு மையங்கள் | மொத்தம் |
---|---|---|---|---|
1. | சின்னசேலம் | 131 | 11 | 142 |
2. | செஞ்சி | 147 | 9 | 156 |
3. | கள்ளக்குறிச்சி | 124 | 0 | 124 |
4. | கல்வராயன் மலை | 85 | 5 | 90 |
5. | காணை | 125 | 1 | 126 |
6. | கண்டமங்கலம் | 121 | 6 | 127 |
7. | கோலியனூர் | 123 | 11 | 134 |
8. | மைலம் | 117 | 8 | 125 |
9. | மரக்காணம் | 118 | 10 | 128 |
10. | மேல்மலையனூர் | 135 | 6 | 141 |
11. | முகையூர் | 168 | 6 | 174 |
12. | ஒலக்கூர் | 102 | 11 | 113 |
13. | ரிஷிவந்தியம் | 130 | 13 | 143 |
14. | சங்கராபுரம் | 151 | 0 | 151 |
15. | திருக்கோயிலூர் | 114 | 5 | 119 |
16. | திருநாவலூர் | 120 | 0 | 120 |
17. | திருவெண்ணைநல்லூர் | 109 | 5 | 114 |
18. | தியாகதுருகம் | 93 | 3 | 96 |
19. | உளுந்தூர்பேட்டை | 127 | 8 | 135 |
20. | வல்லம் | 114 | 11 | 125 |
21. | வானூர் | 170 | 9 | 179 |
22. | விக்கிரவாண்டி | 109 | 3 | 112 |
23. | விழுப்புரம் | 67 | 0 | 67 |
மொத்தம் | 2800 | 141 | 2941 |
தேசிய ஊட்டச்சத்து குழுமம்
தமிழ் நாட்டில் அரியலூா், நீலகிரி, விழுப்புரம், திண்டுக்கல் மற்றும் சென்னை ஆகிய 5 மாவட்டங்களில் 2017 – 2018 ஆண்டில் தேசிய ஊட்டச்சத்து குழுமம் செயல்படுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2018 – 2019 மற்றும் 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் மீதமுள்ள மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்து மூன்று ஆண்டுகளில் 0-6 வயது குழந்தைகள், கா்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்காக கீழ்கண்டவாறு இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வ.எண் | நோக்கங்கள் | இலக்கு |
---|---|---|
1. | 0 – 6 வயது குழந்தைகளிடையே குள்ளத்தன்மையை குறைத்தல் மற்றும் தடுத்தல் | ஒவ்வொரு ஆண்டும் 2 சதவிகிதம் வீதம் 6 சதவிகிதம் குறைத்தல் |
2. | 0 – 6 வயது குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு (எடை குறைவு) குறைத்தல் மற்றும் தடுத்தல் | ஒவ்வொரு ஆண்டும் 2 சதவிகிதம் வீதம் 6 சதவிகிதம் குறைத்தல் |
3. | 6 – 59 மாதங்கள் இளங்குழந்தைகளிடையே இரத்தசோகை தாக்கத்தினை குறைத்தல் | ஒவ்வொரு ஆண்டும் 3 சதவிகிதம் வீதம் 9 சதவிகிதம் குறைத்தல் |
4. | 15 – 49 வயதில் உள்ள வளரிளம் பெண்கள் மற்றும் தாய்மார்களிடையே இரத்தசோகை தாக்கத்தினை குறைத்தல் | ஒவ்வொரு ஆண்டும் 3 சதவிகிதம் வீதம் 9 சதவிகிதம் குறைத்தல் |
5. | குறைந்த பிறப்பு எடையை குறைத்தல் | ஒவ்வொரு ஆண்டும் 2 சதவிகிதம் வீதம் 6 சதவிகிதம் குறைத்தல் |
குழந்தைகளுக்குள் காணப்படும் உயரக் குறைவு (Stunting) / தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டினால் உடல் மெலிதல் (Servere Wasting) குறைபாடுகள்உயர குறைபாட்டினால் மிகக் குறைந்த வளா்ச்சி ஏற்படுவது என்பது நன்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வயதிற்கேற்ற உயரக் குறைவு மூலம் அளவிடப்படுகிறது இரண்டு வயதிற்கு முன்பு உயரம் குறைவாக காணப்படுவதால் குறைவான அறிவாற்றல் மற்றும் முன்பருவக்கல்விப் பருவத்தில் கற்றலில் குறைபாடு ஏற்படுகிறது. இந்நிலை வளரிளம் பருவத்திலும் தொடா்வதால் தனி நபா், குடும்பம் மற்றும் சமுதாய அளவில் குறிப்பிடத்தக்க கல்வி மற்றும் பொருளாதார விளைவுகளும் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகிறது.
ஊட்டச்சத்து குறைபாட்டினால் உடல் மெலிந்து காணப்படுவதால் (Wasting) என்று அழைக்கப்படும். இது உயரத்திற்கு ஏற்ற எடையால் அளவிடப்படும். இந்நிலை குறுகிய காலத்திற்குள் ஏற்படும் இழப்பாகும் மாறாக உயரத்திற்கு ஏற்ற எடை நீண்ட நாள் ஊட்டச்சத்து குறைபாடாக கருதப்படுகிறது.
முக்கிய அலுவலா் தொடா்பு விபரம்
மாவட்ட திட்ட அலுவலா்
எண்.1 கீழ்தளம் மாவட்ட ஆட்சியரகம்,
விழுப்புரம் மாவட்டம்- 605602
தொலைபேசி – 04146 – 224719
மின்னஞ்சல் முகவரி – dpoicdsvpm[dot]tn@nic[dot]in