நிகழ்வுகள் மற்றும் பண்டிகைகள்
கூவாகம் திருவிழா
எல்லோராலும் ”அரவாணி” என்று அறியப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் 18 நாட்கள் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் நடத்தும் கூவாகம் திருவிழா இது. இந்த திருவிழா வெளிநாட்டவர்கள் அதாவது சிங்கப்பூர், மலேசியா மக்கள் மற்றும் வெளிமாநிலத்தவர்கள் அதாவது டில்லி, மகாராஷ்ட்ரா, ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் கர்நாடக மக்களாலும் கவரப்பட்ட ஒன்றாகும்.
செவ்வாய் கிழமை பூஜையின் போது ”அரவாணி” என்று அறியப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் கூவாகம் கோயிலில் உள்ள முக்கிய தெய்வமான அரவானே தங்களின் கணவராக எற்றுக்கொண்டு அடையாளப்பூர்வமாக திருமணம் செய்துகொள்கிறார்கள். மகாபாரதப் போரின் போது வில்வித்தையில் மிகவும் சிறந்து விளங்கிய அர்ஜுனன் அரவானை தனது வில்லையும் அம்புகளையும் வைத்து வீழ்த்தினார். ஆகையால் அரவானுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட அந்த ‘அரவான்கள்’ ஒரே நாளில் விதவைகளாக்கப்படுகின்றனர். இவ் விழாக்காலங்களில் அரவான்களுக்கென கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.