மூடுக

கல்வி

முன்னுரை

கல்வி என்பது ஒரு சமுதாயம் பெற்ற தலை சிறந்த அறிவு மற்றும் அதன் திறன்களை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலை முறைக்கு எடுத்து செல்லும் கருவி எனலாம். கல்வி ஒரு குழந்தையின் படைப்புத் திறனை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வாய்ப்புகளை வழங்கும் தன்மையுடையது. கல்வி மனிதர்களுக்கு உலகம் பற்றிய அறிவை கொடுக்கிறது. கல்வியறிவு ஒருவருக்கு சரியான கண்ணோட்டத்தில் தகவல்களைப் புரிந்து கொள்ளும் திறனை அளிக்கிறது.

நோக்கங்கள்

 • உலகளாவிய அணுகல். சமபங்கு. தரம் முதலியன. நிலைகளில் வழங்குதல்.
 • அரசியலைப்பிற்குட்பட்டு பாடத்திட்டத்தையும் மதப்பீடு நடைமுறைகளையும் மேம்படுத்துதல்.
 • குழந்தையின் அறிவு, திறமை மற்றும் குழந்தையின் உடல் மற்றும் மன திறன்களை முழுவதுமாக வளர்ப்பது.
 • கண்டுபிடிப்பு மற்றும் ஆய்வு முறைகள் முலம் குழந்தைகளுக்கு இணக்கமான முறையில் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
 • குழந்தைகளுக்கு ஆண்டுத் தேர்வுகளால் ஏற்படுகின்ற பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை அகற்றுவதற்காக, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறையினை நடைமுறைப்படுத்துவதன் மூலம், வகுப்பறை வாழ்க்கையில் தேர்வுகள் மிகவும் நெகிழ்வானதாகவும் ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் ஆக்குதல்.

திட்டங்கள்

அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA)

அனைவருக்கும் கல்வி இயக்கம் (சர்வ சிக்ஷசா அபியான் (SSA) என்பது அடிப்படை கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் மாநில அரசு மத்திய அரசுடன் கூட்டு சேர்ந்து செயல்படுத்தும் ஒரு திட்டமாகும்

 • 6 முதல் 14 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி வழங்குவதன் மூலம் பாலின வகை இடைவெளிகளை அகற்றி சமுதாயத்தினை மேம்பாடு அடையச் செய்தல்.
 • 100 விழுக்காடு மாணவர் சேர்க்கையினை உறுதிபடுத்துதல்.
 • பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளை பள்ளியிலிருந்து வெளியேறாமல் தக்க வைத்தல்.
 • அனைத்து பள்ளிகளிலும் தரமான அடிப்படை கல்வியினை வழங்குதல்.
 • நலிந்த பிரிவினரின் குழந்தைகளுக்கும், மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கும் பள்ளிகளில் உள்ளடங்கிய கல்வியினை வழங்குதல்.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் (RMSA)

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (இராக்ஷடிரிய மத்திய மிக் சிக்ஷசா அபியான் (RMSA) என்பது அனைத்துத் தரப்பு குழந்தைகளுக்கும் இடைநிலைக் கல்வியினை அளிப்பதன் மூலம் தேசத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை எட்ட முடியும் என்ற நோக்கிலும், 5 கி.மீ. சுற்றளவிற்குள் ஒரு உயர்நிலைப் பள்ளியை அமைப்பதன் மூலம் இடைநிலை வகுப்புகளில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான மாணவர் சேர்க்கையையும், மேல்நிலைக் கல்வியில் 75 விழுக் காட்டிற்கும் அதிகமான மாணவர் சேர்க்கையையும் உறுதிப்படுத்த முடியும் என்ற நோக்கிலும் 2009 ஆம் ஆண்டு முதல் மாநில அரசு மத்திய அரசுடன் கூட்டு சேர்ந்து செயல்படுத்தும் ஒரு திட்டமாகும்.

இத்திட்டத்தின் மூலம் இடைநிலைக் கல்வியை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அளிப்பதன் மூலம் பாலின வகை மற்றும் சமூக வகை இடைவெளிகளை அகற்றி சமுதாயத்தினை மேம்பாடு அடையச் செய்யவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

குறிக்கோள்கள்

 • 14-18 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கும் நல்ல தரமான கல்வி கிடைத்தல்
 • ஒவ்வொரு குடியிருப்புக்கும் ஒரு நியாயமான தூரத்தில் அதாவது 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு உயர்நிலைப் பள்ளி ஒன்றை அமைத்து ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பில் மாணவர் சேர்க்கையினை மேம்படுத்துதல் மற்றும் 7 முதல் 10 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் மேல் நிலைப் பள்ளிகளை அமைப்பதன் மூலம் மேல்நிலை வகுப்புகளில் மாணவர் சேர்க்கையினை மேம்படுத்துதல்.
 • அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் பரிந்துரைக்கப்பட்ட – நிலையான நெறிமுறைகளின்படி கல்வி தரத்தை மேம்படுத்துதல்.
 • இடைநிலைக்கல்வி பெறுவதற்கு சமூக பொருளாதார மற்றும் பாலின தடைகளை அகற்றுதல்.
 • 2020 ஆம் ஆண்டிற்குள் 14-18 வயதிற்குட்பட்டவர்கள் 100 விழுக்காடு இடைநிலைக் கல்வியினை பெறுதல்.
 • ஒவ்வொரு உயர்நிலை பள்ளிகளுக்கும் கற்பித்தல் பணிக்குத் தேவையான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களை பணியமர்த்துதல்.
 • அனைத்து மாணவர்களும் நல்ல தரமான இடைநிலைக் கல்வியை தொடர வைத்தல்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் 348 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளின் நுழை நிலை வகுப்பில் 5820 இடங்கள் உள்ளன. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம்-2009 பிரிவு 12(1) இன்படி வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளின் நுழை நிலை வகுப்புகளில் 5820 இடங்களில் 25 விழுக்காடு ஆன 2741 இடங்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. மீதம் 3079 ஒதுக்கப் பட்டுள்ளன.

 

நலத்திட்டங்கள் (பள்ளிக்கல்வி)
வரிசை எண் திட்டங்கள் பயனாளிகள்
1. விலையில்லா பாடப்புத்தகங்கள் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ – மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறது
2. விலையில்லா பாடகுறிப்பேடுகள் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ – மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறது
3. விலையில்லா மடிக்கணினி 12-ம் மாணவ – மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறது
4. விலையில்லா புத்தகப் பைகள் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ – மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறது
5. விலையில்லா சீருடைகள் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ – மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறது
6. விலையில்லா காலணிகள் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ – மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறது
7. விலையில்லா பேருந்து பயண அட்டைகள் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ – மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறது
8. விலையில்லா மிதிவண்டிகள் 11-ம் வகுப்பு மாணவ – மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறது
9. விலையில்லா கிரையான்கள் 1 முதல் 2ஆம் வகுப்பு வரை மாணவ – மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறது
10. விலையில்லா வண்ண பென்சில்கள் 3 முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவ – மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறது
11. விலையில்லா ஜியோமெட்ரிக் பெட்டிகள் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை மாணவ – மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறது
12. விலையில்லா புவியியல் வரைபடங்கள் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை மாணவ – மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறது
13. இடைநிற்றலை தடுப்பதற்கான ஊக்கத் தொகை 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ – மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறது
14. வருவாய் ஈட்டும் பெற்றோர் நிரந்தர ஊனமுற்றாலோ – இறந்தாலோ வழங்கப்படும் உதவித் தொகை 1 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவ – மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறது

 

நிர்வாக வாரியான பள்ளிகளின் எண்ணிக்கை
நிர்வாக வகை தொடக்கப் பள்ளிகள் இடை நிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகள் மொத்தம்
பள்ளிக்கல்வித்துறை அரசு பள்ளிகள் 11 04 177 174 366
ஆதிதிராவிடர் / மலை சாதியினர் பள்ளிகள் 80 22 10 7 119
அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகள் (முழுவதும்) 228 53 6 7 294
அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளிகள் (பகுதிநேரம்) 0 0 18 16 34
தனியார் சுயநிதிப் பள்ளிகள் 05 01 12 13 31
மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் 0 0 69 65 134
மத்திய அரசின் வாரியப் பள்ளிகள் 0 0 18 0 18
சிறப்பு பள்ளிகள் (CWSN) 0 0 2 3 5
சமூக நலப்பள்ளிகள் 0 0 1 0 1
நர்சரி பள்ளிகள் 244 0 0 0 244
ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் 1238 377 0 0 1615
நகராட்சிப் பள்ளிகள் 11 0 2 3 16
ஆங்கிலோ இந்தியன் 0 0 1 1 2
கஸ்துரிபா காந்தி பாலிகா வித்யாலயா 0 0 0 0 0
தனியார் பள்ளிகள் 249 19 103 82 453
மொத்தம் 1817 478 316 289 2897

 

அலுவலர்களின் தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள்
பதவி தொலைபேசி எண்கள் கைபேசி எண்கள் மின்னஞ்சல் முகவரி
முதன்மைக்கல்வி அலுவலர் – விழுப்புரம் 04146-220402 7598778600 ceovpm@nic[dot]in
கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அனைவருக்கும் கல்வி இயக்கம் விழுப்புரம் 04146-222063 9942993800 ceossavpm@gmail[dot]com
மாவட்டத் திட்ட அலுவலர் இடைநிலைக்கல்வி திட்டம், விழுப்புரம் 7373003132 rmsavpm@gmail[dot]com
மாவட்ட உடற்கல்வி ஆயவாளர், விழுப்புரம் 7598778605 dipevillupuram@gmail[dot]com
மாவட்டக்கல்வி அலுவலர்கள்
மாவட்டக்கல்வி அலுவலர் – விழுப்புரம் 04146-220093 7598778607 deovpm2018@gmail[dot]com
மாவட்டக்கல்வி அலுவலர் – திண்டிவனம் 04147-224439 7598778608 deotdm2018@gmail[dot]com
மாவட்டக்கல்வி அலுவலர் – கள்ளக்குறிச்சி 04151-225522 9487487112 deokki2018@gmail[dot]com
மாவட்டக்கல்வி அலுவலர் – செஞ்சி 7339289302 deogin2018@gmail[dot]com
மாவட்டக்கல்வி அலுவலர் – உளுந்துர்பேட்டை 8903140160 deoupt2018@gmail[dot]com
மாவட்டக்கல்வி அலுவலர் – திருக்கோவலுர் 8778200313 deotkr2018@gmail[dot]com
விழுப்புரம் வட்டாரக்கல்வி அலுவலர்கள்
வட்டாரக்கல்வி அலுவலர், விழுப்புரம் 9750983165 beovillupuram@gmail[dot]com
வட்டாரக்கல்வி அலுவலர் – கோலியனுர் 9750983166 beokoliyanur@gmail[dot]com
வட்டாரக்கல்வி அலுவலர்-கண்டமங்கலம் 9750983181 beokandamangalam@gmail[dot]com
வட்டாரக்கல்வி அலுவலர் – காணை 9750983177 beokanai@gmail[dot]com
வட்டாரக்கல்வி அலுவலர் – விக்கிரவாண்டி 9750983179 beovikkiravandi@gmail[dot]com
திண்டிவனம் வட்டாரக்கல்வி அலுவலர்கள்
வட்டாரக்கல்வி அலுவலர் – மரக்காணம் 9750983196 beomarakkanam@gmail[dot]com
வட்டாரக்கல்வி அலுவலர் – வானுர் 9750983156 beovanur@gmail[dot]com
வட்டாரக்கல்வி அலுவலர் – மயிலம் 9750983174 beomailam@gmail[dot]com
வட்டாரக்கல்வி அலுவலர் – ஒலக்கூர் 9750983189 beoolakkur@gmail[dot]com
கள்ளக்குறிச்சி வட்டாரக்கல்வி அலுவலர்கள்
வட்டாரக்கல்வி அலுவலர் – கள்ளக்குறிச்சி 9750983162 beokallakurichi@gmail[dot]com
வட்டாரக்கல்வி அலுவலர் – சின்னசேலம் 9750983184 beochinnasalem@gmail[dot]com
வட்டாரக்கல்வி அலுவலர் – சங்கராபுரம் 9750983160 beosankarapuram@gmail[dot]com
செஞ்சி வட்டாரக்கல்வி அலுவலர்கள்
வட்டாரக்கல்வி அலுவலர் – செஞ்சி 9750983169 beogingee@gmail[dot]com
வட்டாரக்கல்வி அலுவலர் – மேல்மலையனுர் 9750983170 beomelmalayanur@gmail[dot]com
வட்டாரக்கல்வி அலுவலர் – வல்லம் 9750983172 beovallam@gmail[dot]com
திருக்கோவிலுார் வட்டாரக்கல்வி அலுவலர்கள்
வட்டாரக்கல்வி அலுவலர் – திருக்கோவிலுர் 9750983190 beotirukoilur@gmail[dot]com
வட்டாரக்கல்வி அலுவலர் – திருவெண்ணைய்நல்லுர் 9750983154 beotiruvennainallur@gmail[dot]com
வட்டாரக்கல்வி அலுவலர் – ரிஷிவந்தியம் 9750983175 beorishivandiam@gmail[dot]com
வட்டாரக்கல்வி அலுவலர் – முகையூர் 9750983182 beomugaiyur@gmail[dot]com
உளுந்தூர்பேட்டை வட்டாரக்கல்வி அலுவலர்கள்
வட்டாரக்கல்வி அலுவலர் – உளுந்தூர்பேட்டை 9750983178 beoulundurpet@gmail[dot]com
வட்டாரக்கல்வி அலுவலர் – திருநாவலூர் 9750983159 beothirunavalur@gmail[dot]com
வட்டாரக்கல்வி அலுவலர் – தியாகதுருகம் 9750983161 beothiyagathurugam@gmail[dot]com